Wednesday, April 29, 2020
அகிம்சைப் போராட்டம் பயன்தராது என்பது
•அகிம்சைப் போராட்டம் பயன்தராது என்பது
மீண்டும் ஒருதடவை நிரூபிக்கப்பட்டுள்ளது!
துருக்கியைச் சேர்ந்த கலைஞர் முஸ்தபா கோஹக் துருக்கி அரசுக்கு எதிராக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று மரணமடைந்தார்.
28 வயதேயான இந்த இளம் இசைக்கலைஞர் கடந்த 297 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்துள்ளார்.
அவர் ஒன்றும் நிறைவேற்ற முடியாத கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்கவில்லை.
அவர் கேட்டதெல்லாம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் மீது சித்திரவதை செய்வதை நிறுத்துமாறு மட்டுமே.
ஆனால் துருக்கி சர்வாதிகார அரசு அவர் கோரிக்கையை நிறைவேற்றவும் இல்லை. அவர் உயிரையும் காப்பாற்றவில்லை.
காந்தியின் தேசம் என்று அழைக்கப்படும் இந்தியாவே அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கவில்லை என்பதை ஈழத்தில் திலீபன், அன்னைபூபதி உண்ணாவிரதங்களின்போது கண்டோம்.
இந்தியா மட்டுமல்ல துருக்கியும் அகிம்சைப் போராட்டத்தை மதிக்காது என்பதை இன்று காண்கிறோம்.
முஸ்தபா கோஹக மரணம் அவர் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பது உண்மையே. ஆனால் அகிம்சை வழிப் போராட்டம் பயன்தராது என்பதை மீண்டும் ஒரு தடவை அது உலகிற்கு நிரூபித்துள்ளது.
கடந்த 03.04.20 யன்று துருக்கியில் இதேபோன்று ஹெலின் போலக் என்ற பெண் 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தார்.
எத்தனை பேர் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தாலும் அகிம்சைப் போராட்டத்தை துருக்கிய அரசு மதிக்கப்போவதில்லை என்பதும் அகிம்சைப் போராட்டத்தின் மூலம் ஒருபோதும் தீர்வு பெற முடியாது என்பதும் நிரூபணமாகியுள்ளது.
குறிப்பு - ஈழத்தில் போராளிகள் ஆயுதம் எந்திப் போராடியது தவறு என்றும் அகிம்சைப் வழியில் போராடினால் தீர்வு பெறலாம் எனக் கூறிவரும் சம்பந்தர் ஐயாவும் சுமந்திரனும் இதற்கு என்ன கூறப் போகிறார்கள்?
Image may contain: 1 person, flower and plant
Image may contain: 1 person, standing and shoes
No comments:
Post a Comment