Wednesday, April 29, 2020
• முட்டாள் அரசு!
• முட்டாள் அரசு!
இலங்கை அரசு தேர்தலை இலக்கு வைத்து செயற்படுகிறதேயொழிய உண்மையில் மக்கள் நலன் கொண்டு செயற்படவில்லை.
கொரோனாவுக்கு 7 பேர் மட்டுமே இறந்துள்ளதாகவும் 19ம் திகதி யாவும் சுமூக நிலைக்கு வந்தவிடும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவிக்கிறார்.
ஆனால் உண்மையில் 45000பேர் கொரோனா தொற்று சந்தேக நபர்கள் இருப்பதாக ராணுவ புலனாய்வு தகவல்கள் கூறுகின்றன.
இதில் ஒருநாளைக்கு 350 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. அந்தளவில்தான் வசதிகள் இருக்கின்றன.
இப்போதுதான் இந்த கோரோனா தொற்றை பரிசோதிக்கும் 4000 கருவிகளை சீனா வழங்கியுள்ளது. அதிலும் 2000 கருவிகள்தான் இன்று வந்துள்ளன.
ஏற்கனவே கொரோனா தொற்று பரிசோதிக்கப்பட்ட சிலருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது.
எனவே ஒருவருக்கே இரண்டு அல்லது மூன்று தடவை பரிசோதனை செய்யப்பட வேண்டியுள்ளது.
இதுதான் உண்மை நிலை. ஆனால் இந்த உண்மையை மறைத்து தான் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டதாக பொய் பிரச்சாரம் செய்கிறது இலங்கை அரசு.
பருப்பும் மீன் ரின்னும் கட்டப்பாட்டு விலையில் விற்க வேண்டும் என இலங்கை அரசு அறிவித்தது.
ஆனால் கடைகளில் பருப்பும் மீன் ரின்னும் இல்லை. ஏனெனில் கடைக்காரர்கள் இவற்றை பதுக்கி விட்டார்கள்.
ஏனெனில் அவர்கள் கொள்முதல் செய்த விலையிலும் பார்க்க குறைந்த விலையில் விற்கும்படி அரசு சட்டம் போட்டுள்ளது.
அதுபோல் இப்போது அரிசியை 90 ரூபாவுக்கு விற்கும்படி அரசு கூறுகிறது. இனி கடைகளில் அரிசியும்; இருக்காது.
ஏனெனில் அவர்கள் அரிசியை 92 ரூபாவுக்கு கொள்முதல் செய்துள்ளார்கள். கிலோவுக்கு எந்த லாபமும் இன்றி இரண்டு ரூபா நட்டத்திற்கு விற்பனை செய்ய எந்த கடைக்காரர் முன்வருவார்கள்?
எனவே அவர்கள் அரிசியை விற்காமல் பதுக்கவே செய்வார்கள். ஒருபோதும் நட்டத்திற்கு விற்பனை செய்யமாட்டார்கள்.
அரசு தானே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும். இல்லையேல் கடைகாரர்களுக்கு மானியம் ஏதாவது வழங்க வேண்டும்.
ஆனால் அரசோ வெறும் சட்டத்தின் மூலம் யாவற்றையும் செய்துவிட முடியும் என முட்டாள்தனமாக நினைக்கிறது.
ஒருபக்கத்தில் கொரோனா கட்டுப்படுத்த முடியவில்லை. இன்னொரு பக்கத்தில் பசிக் கொடுமையில் களவு, கொள்ளை , கொலைகள் அதிகரிக்கப் போகின்றன.
நேற்று மட்டும் தமிழ் பகுதிகளில் மூன்று தற்கொலைகள், இரண்டு கொள்ளைகள் நடைபெற்றுள்ளன.
ஆனால் அரசுக்கு இதுபற்றி எதுவும் கவலை இல்லை. அரசின் அக்கறை எல்லாம் தேர்தலை விரைவில் நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற வேண்டும் என்பது மட்டுமே.
அரசை விமர்சிக்க வேண்டிய எதிர்க்கட்சிகள் உயிருடன் இருக்கின்றனவா என்றுகூட தெரியவில்லை.
பாவம் மக்கள்!
Image may contain: 1 person, standing
No comments:
Post a Comment