Wednesday, April 29, 2020
•கொரோனோவும் கடவுளும்!
•கொரோனோவும் கடவுளும்!
கொரோனோ பல கேள்விகளை எம் மத்தியில் எழுப்பியுள்ளது. அதில் முக்கியமானது “கடவுள் எங்கே?” என்பது.
ஆம். உலகில் பல கடவுள்களும் மதங்களும் இருக்கின்றன. ஆனால் இதில் ஒரு கடவுள்கூட மக்களை காக்க ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு விடை காண வேண்டியுள்ளது.
கொரோனா வந்ததும் கடவுள் வரவில்லை. மாறாக சக மனிதனே வந்தான். தம் உயிரை கொடுத்து மனிதர்களை காப்பாற்றிய உயர்ந்த மனிதர்களை இந் நாட்களில் கண்டு வருகிறோம்.
ஆனால் சிலர், கிருத்தவ போதகரினால்தான் யாழ்ப்பாணத்தில் கொரோனோ வந்தது என்றும் இந்தியாவில் முஸ்லிம்களால்தான் கொரோனோ பரவியது என்றும் மாறிமாறி பழி போடுகின்றனர்.
இவர்கள் மற்ற மதத்தவர் மீது பழி போடுவதில் குறியாக இருக்கின்றனரேயொழிய தங்களின் எல்லாம் வல்ல கடவுள் ஏன் தங்களைக் காப்பாற்ற வரவில்லை என்பதை கேள்வி எழுப்ப தயாராக இல்லை.
2013ல் அமெரிக்காவில் “கல்ரெக்” பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்; ஸ்டீபன் உரையாற்றினார். அவரது பேச்சைக் கேட்க மாணவர்கள் 12 மணி நேரம் வரிசையில் காத்து இருந்தனர்.
உலகில் பல மதங்களும், அவற்றின் கடவுள்களும் இருக்கின்றன. இவை பல இருந்தாலும் அவை எல்லாம் ஒருமித்த குரலில் கூறுவது “கடவுள் பூமியைப் படைத்தார்” என்பதே.
ஆனால் ஸ்டீபன் அவர்கள் பெரு வெடிப்பின் மூலமே பூமி உருவானது என்றும் அந்த பெரு வெடிப்பிற்கு கடவுள் தேவையில்லை என்றும் விளக்கியுள்ளார்.
இது பற்றிய விபரம் அறிய விரும்புவோர் கீழ்வரும் லிங்கை பார்க்கவும்.
http://www.dailymail.co.uk/…/Stephen-Hawking-says-The-Big-B…
அறியாமையின் இருப்பிடமே கடவுள். அறிவு வளர வளர கடவுள் சுருங்கி வருகிறார். இன்று இல்லாவிடினும் என்றாவது ஒரு நாள் அறிவின் வளர்ச்சியானது கடவுளை முற்றாக நீக்கிவிடும் என்பதை வரலாறு காட்டுகிறது.
இலங்கை, இந்திய நாடுகளில் பாடசாலைகளைவிட கோயில்களின் எண்ணிக்கை அதிகம். பல்கலைக்கழகங்களைவிட கடவுள்களின் எண்ணிக்கை அதிகம்.
இதுவே மக்களின் அறியாமைக்கும் மதங்களினது ஆதிக்கத்திற்கும் காரணமாக இருக்கிறது. மக்கள் பகுத்தறிவு பெற வைப்பதே இந்த அறியாமையிலிருந்து விடுபட ஒரே வழியாகும்.
ஆனால் இந் நாடுகளின் அரசுகள் மக்களின் இந்த அறியாமையைப் போக்குவதற்கு தயாராக இல்லை.
ஏனெனில், உழைத்து உழைத்து உருக்குலைந்து போயுள்ள ஏழை மக்கள் மேலெழும்ப விடாமல் நசுக்குவதற்கு இந்த மதமும் கடவுளும் அரசுகளுக்கு நன்கு உதவுகின்றன.
Image may contain: 1 person, sitting
No comments:
Post a Comment