Wednesday, April 29, 2020
தோழர் தீரன் திருமுருகனை உடனே விடுதலை செய்!
•தமிழக அரசே!
தோழர் தீரன் திருமுருகனை உடனே விடுதலை செய்!
தோழர் தீரன் திருமுருகன் ஒரு வழக்கறிஞர். ஆனாலும் அவரை எந்தவித முன்னறிவித்;தலும் இன்றி தமிழக காவல்துறை பிடித்துச் சென்றுள்ளது.
தோழர் தீரன் திருமுருகன் ஒரு சிறந்த தமிழ்த்தேசிய உணர்வாளர். தஞ்சையில் குடமுழுக்கு தமிழில் நடைபெறக் காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.
தோழர் தமிழரசன் பிறந்தநாளில் முகநூல் நேரலையில் பேசியதற்காக இவரை சிறையில் அடைக்க முயல்கிறது தமிழக அரசு.
தோழர் தமிழரசன் பெயரால் மூச்சுவிட்டால்கூட அதைத் தாங்கிக்கொள்ள தமிழக அரசு தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.
அந்தளவு தூரத்திற்கு தோழர் தமிழரசன் பெயரைக் கேட்டாலே தமிழக அரசும் இந்திய அரசும் அஞ்சுகின்றன.
ஆம். யாருடைய பெயரைக் கேட்டால் எதிரி அஞ்சுகிறானோ அவனே உன் இனத்தின் தலைவனாக இருப்பதற்கு தகுதியானவன்.
தமிழக தமிழர்களின் தலைவராக தோழர் தமிழரசன் உருவாகிறார்.
Image may contain: 2 people, including தமிழ்நேயன் தமிழ், possible text that says 'காவல்துறையே தோழரை விடுதலை செய்! வழக்கறிஞர் தீரன் திருமுருகன் பொதுச்செயலாளர் தமிழர் கட்சி தமிழ்த்தேச மக்கள் கட்சி'
No comments:
Post a Comment