Wednesday, April 29, 2020
ஒருவன் திருடினால் அவன் கைகள் வெட்டப்பட வேண்டும்.
ஒருவன் திருடினால் அவன் கைகள் வெட்டப்பட வேண்டும்.
அதுவே அவன் பசிக்காக திருடியிருந்தால் வெட்டப்பட வேண்டியது அவன் கைகள் அல்ல, ஆட்சியாளர்களி-ன் கைகள் .
இந்த நபர் தன் நோயாளி மனைவிக்காகவும் பிள்ளைகளுக்காகவும் பசியைப் போக்குவதற்காக பத்து தேங்காய்களை திருடியிருக்கிறார்.
அதற்காக லைற் கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்தப்பட்டது மட்டுமல்ல அவர் மீது வழக்கும் போடப்பட்டுள்ளது.
இந்த இலங்கை அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு சட்டத்தைப் போடுகிறதேயொழிய ஏழை மக்களின் பசியைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை.
இங்கு கவனத்தில் கொள்ளவேண்டியது என்னவெனில் இந்த திருடர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர். சிங்களப் பிரதேசத்தில் இது நடைபெற்றுள்ளது.
அதாவது சிங்கள இனத்திற்காக ஆட்சி அமைத்திருப்பதாக கூறிய கோத்தபாயாவினால் சிங்கள மக்களுக்குகூட எதுவுமே செய்யவில்லை என்பதுதான்.
எநத இன மக்கள் தங்கள் மீட்பனாக இந்த ராஜபக்ச கும்பலை நினைத்தார்களோ அந்த சிங்கள இன மக்களே விரைவில் இவர்களை விரட்டி அடிப்பார்கள்.
இது உறுதி.
Image may contain: one or more people and people standing
No comments:
Post a Comment