Monday, June 29, 2020
முட்டி போட்டு உயிர் வாழ்வதை விட
முட்டி போட்டு உயிர் வாழ்வதை விட
எழுந்து நின்று சாவது மேலானது- சேகுவாரா
இன்று (14.06.20) தோழர் "சே" யின் பிறந்த தினமாகும்.
அவர் கையில் கிட்டார் இருந்தபோதும் சரி அவர் கையில் துப்பாக்கி இருந்தபோதும் சரி அவை எப்போதும் மக்களுக்காகவே இயங்கின.
அவர் பல கருத்துக்களை கூறியிருந்தபோதும் தமிழ் மக்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான கருத்து “ அடிமையாக விழுந்து கிடப்பதைவிட எழுந்து நின்று போராடி மடிவதே மேல்” என்பதாகும்.
எமக்கு என்று ஒரு தொன்மையான மொழி உண்டு
எமக்கு என்று ஒரு கலை கலாச்சாரம் மற்றும் பண்பாடு உண்டு
எமக்கு என்று நாம் செறிந்து வாழும் ஒரு நிலப் பரப்பு உண்டு
எமக் கென்று பொருளாதார வளமும் இயற்கை வளமும் கூட உண்டு
இருந்தும் எம்மை நாமே தீர்மானிக்கும் ஆட்சி எம்மிடம் இல்லை
ஏனெனில் நாம் அடிமையாக வீழ்ந்து கிடக்கிறோம்.
போர்த்துக்கேயரை எதிர்த்து போராடிய நாம்
ஒல்லாந்தரை எதிர்த்து போராடிய நாம்
ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய நாம்
இன்று ஏன் போராடாமல் வீழ்ந்து கிடக்கிறோம்?
ஏனெனில் நாம் “அடிமை” என்பதை உணராமல் இருக்கிறோம்.
எமக்கு தேவை அடுத்த வருடம் தீர்வு வரும் என்று ஏமாற்றும் தலைவர் அல்ல
எமக்கு தேவை இந்தியாவின் உதவியுடன் தீர்வு வரும் என்று கூறும் தலைவர் அல்ல.
எமக்கு தேவை அடிமையாக கிடக்கிறாய். எழுந்து நின்று போராடு என்று கூறும் ஒரு தோழர் சே
Image may contain: 1 person, playing a musical instrument, guitar and text
No comments:
Post a Comment