Monday, June 29, 2020
சிரித்துக் கொண்டு செருக்களம் புகுர முடியும்
•சிரித்துக் கொண்டு செருக்களம் புகுர முடியும் ஆனால்
சிரித்துக்கொண்டு மரணத்தை முத்தமிட முடியுமா?
“சிரித்துக் கொண்டு வாடா தமிழா செருக்களம் புகுர” என்று தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர்கள் 1977களில் மேடைகளில் பேசுவதுண்டு.
ஆனால் இவ்வாறு அழைத்த எந்த தலைவர்களும் களம் புகுரவில்லை. அதுமட்டுமல்ல தங்கள் பிள்ளைகளையும் களத்திற்கு அனுப்பவில்லை.
சரி அதை விடுவம். அதைக் கதைப்பதில் இப்ப எந்த பயனும் இல்லை. ஆனால் களம் புகுந்த இளைஞர்கள் சிரித்துக் கொண்டே புகுந்தனர் என்பதில் ஜயம் இல்லை.
அதேவேளை, சிரித்துக்கொண்டே மரணத்தை முத்தமிட முடியுமா என்று நான் சந்தேகப்பட்டது உண்டு.
போராடிக் கொண்டிருக்கும்போது இறப்பது வேறு. ஆனால் இறப்பதற்கென்றே போராட செல்வது வேறு. அதுவும் சிரித்துக் கொண்டே செல்வது இன்னும் வேறுவிதமானது.
அதுவும் எமது காலத்தில் எம் கண் முன்னால் அந்த அதிசயத்தை எமது இளைஞர்கள் செய்து காட்டியுள்ளார்கள் என்பதை அறியும்போது பெரிமிதமாக இருக்கிறது.
இதோ போர்க் என்ற இளைஞரை பாருங்கள்.
மாங்குளம் ராணுவமுகாமை தாக்குவதற்கு வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை சிரித்த முகத்துடன் அவர் விடைபெற்று செல்வதைப் பாருங்கள்.
இன்னும் சில நிமிடங்களில் அவர் மரணமடையப் போகிறார் என்பது அவருக்கு நன்கு தெரியும்.
இந்த இறுதி நிமிடங்களில் அவரின் பெற்ற தாயின் முகம் நினைவுக்கு வந்திருக்கும்.
அவரது சகோதரர்களின் நினைவுகள்கூட வந்திருக்கும். அவர் பிறந்து வளர்ந்த மண் நினைவுக்கு வந்திருக்கும்.
இத்தனையும் தாண்டி அவரால் எப்படி சிரித்த முகத்துடன் சென்று மரணத்தை முத்தமிட முடிந்தது?
பெண்களை கர்ப்பமாக்கி தற்கொலைதாரிகளாக அனுப்புகிறார்கள் என்று மணி ரத்தினம் படம் எடுத்தார்.
போதை மருந்து கொடுத்து தற்கொலைதாரிகளை அனுப்புகிறார்கள் என்று இலங்கை அரசு பிரச்சாரம் செய்தது.
போராட சென்றவர்களை பலவந்தமாக தற்கொலைதாரிகளாக மாற்றுகிறார்கள் என்று இந்திய அரசு கூறியது.
ஆனால் இதெல்லாம் தவறான, பொய் பிரச்சாரம் என்பதை நிரூபிக்கும் பல சாட்சியங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
எதிர்காலத்தில் வரலாறு இவர்களை எப்படி அடையளப் படுத்தப் போகின்றது என்று தெரியவில்லை.
ஆனால், சிரித்தக்கொண்டே மரணத்தை முத்தமிட முடியும் என்பதை நிரூபித்த இவர்களது தியாகம் எந்தவித சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டது. அற்புதமானது.
Image may contain: 1 person
No comments:
Post a Comment