Monday, June 29, 2020
இட்லிக்குள் கறி வந்தது எப்படி
இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்று கேட்பவர்கள் தமிழ்நாட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களின் விடுதலை குறித்து ஏன் கேட்பதில்லை என்று ஒரு பதிவு அண்மையில் போட்டிருந்தேன்.
உடனே தமிழ்நாட்டு மூத்த ஊடகவியலாளர் ஒருவர் நான் சீமானிடம் காசு வாங்கிக் கொண்டு எழுதுவதாகவும் தேவையானால் தான் ஆயிரம் ரூபா தருவதாகவும் எழுதினார்.
நான் லண்டனில் இருக்கிறேன். அவர் தரும் ஆயிரம் ரூபா எனக்கு குண்டி துடைக்கும் பேப்பர் வாங்கவே பத்தாது என்பது அவருக்கு தெரியுமோ தெரியாது.
ஆனால் நான் தேர்தல் பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர் தமிழரசனையும் அவரது தமிழ்நாடு விடுதலைப்படையையும் ஆதரிக்கிறேன் என்பதை நன்கு தெரிந்தும் எதற்காக அவர் என்மீது சீமான் முத்திரையை குத்தினார் என்று யோசித்து பாhத்தேன்.
கடந்தவாரம் சேலத்தில் இருந்து ஒரு பொறியல் பட்டதாரி மாணவன் என்னுடன் தொடர்பு கொண்டார். அசாமில் லெனின் படம் போட்டதாக ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செய்தியை தந்து அது பற்றி ஒரு பதிவு எழுதுமாறு என்னிடம் கேட்டார்.
அப்போது நான் அவரிடம் “இந்தியாவில் இதை எழுதுவதற்கு பலர் இருக்கிறார்கள். அப்படியிருக்க ஈழத் தமிழனான அதுவும் லண்டனில் இருக்கும் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்” என்று அவரிடம் கேட்டேன்.
அதற்கு அவர் உடனே “ உங்கள் பதிவுகளை பலர் படிக்கிறார்கள். அதுமட்டுமல்ல ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள்” என்று பதில் அளித்தார்.
அம். உண்மைதான். பலபேர் படிக்கிறார்கள். அதனால்தான் எனது பதிவுகளுக்கு உரிய பதில் அளிக்க முடியாமல் சிலர் முத்திரை குத்த முனைகின்றனர்.
நான் எந்த பதவியிலும் இல்லை. நான் எந்த ஊடகத்திலும் என் கருத்துகளை கூறவில்லை. ஆனாலும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு என் கருத்துகள் சென்றடைகிறது என்றால் அதற்கு ஒரே காரணம் மக்கள் என்மீது கொண்ட நம்பிக்கை.
இந்த நம்பிக்கை என்பது ஒரு நாளில் வந்தது அல்ல. இதற்கு பின்னால் 40 வருட மக்களுக்கான எனது உண்மையான உழைப்பும் அர்ப்பணிப்பும் இருக்கிறது.
இதுபுரியாமல் நான் விதைக்கும் கருத்துகள் மக்களால் பற்றிக் கொள்ளப்பட்டுவிடுமோ என அஞ்சி முத்திரை குத்தி பதில் அளிக்க முனைகின்றனர்.
அவர்களுக்கு நான் கூறும் பதில் முடியுமாயின் என் கருத்தை கருத்தால் சந்தியுங்கள். அவதூறுகளால் அல்ல.
குறிப்பு - கீழே உள்ள படம் எனது பதிவு ஒரு முகநூலில் மட்டும் சுமார் இரண்டு லட்சத்து இருபத்தோயாயிரம் பேரை சென்றடைந்ததைக் காட்டுகிறது. நான் நாலு முகநூலில் என் பதிவுகளை செய்கிறேன். அதை பலபேர் பகிர்கிறார்கள். அப்படியென்றால் மொத்தம் எத்தனை லட்சம் பேரை என் பதிவுகள் சென்றடைகிறது என்பதை கணக்கிட்டு பாருங்கள்.
Image may contain: Balan Chandran, sitting and text
No comments:
Post a Comment