1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில்
நாங்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தோம்
அப்போது எங்கள் மீது
ஒரு போர்வையை போர்த்தி விட்டனர்
அது இந்திய தேசியக்கொடி என்ற போர்வை
விடிந்ததும் விழித்துப் பார்த்தோம்
எம் மீது போர்வை இருந்தது – ஆனால்
எமது கோவணத்தைக் காணவில்லை
தூங்குபவனுக்கு போர்வை முக்கியம்
விழித்துக் கொண்டவனுக்கு கோவணம் முக்கியம்
வாருங்கள் தேசியக் கொடியை கிழிப்போம்
அவரவர் கோவணத்தை அவரவர் கட்டிக் கொள்வோம்!
நன்றி – பாவலர் அறிவுமதி
குறிப்பு – கடந்த வருடம் கீழே உள்ள படத்தை பிரசுரித்தமைக்காக எனது முகநூல் இரண்டு வாரம் தடை செய்யப்பட்டது.
Image may contain: 1 person, outdoor and nature
No comments:
Post a Comment