Saturday, September 26, 2020
போங்கடா நீங்களும் உங்கட நியாயமும்!
•போங்கடா
நீங்களும் உங்கட நியாயமும்!
திலீபன் மகேந்திரன் என்பவர் தேசியக் கொடியை அவமதித்தார் என்று வழக்கு பதிவு சிறையில் அடைத்ததுடன் அவரின் கையையும் அடித்து உடைத்தார்கள் தமிழக பொலிசார்.
அதேநேரம் நடிகர் எஸ.வி.சேகர் தேசிய கொடியை அவமதித்தார் என்ற வழக்கில் அவர் மன்னிப்பு கேட்டால் வழக்கை வாபஸ் பெறுவதாக ஆபர் வழங்குகின்றனர் அதே தமிழக பொலிசார்.
அதையும் ஆறுதலாக சிந்தித்து கூறுவதற்காக ஒரு வார கால அவகாசத்தையும் சேகருக்கு வழங்கினார்கள் இந்த தமிழக பொலிசார்.
அதேவேளை தேசியக்கொடியை அவமதித்ததாக திருவண்ணாமலையைச் சேர்ந்த உணர்வாளர் கண்ணதாசன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் தமிழக பொலிசார்.
அத்துடன் தமிழர் கழக பொதுச்செயலர் மணிகண்டன் அவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் இதே தமிழக பொலிசார்.
திலீபன் மகேந்திரன், கண்ணதாசன், மணிகண்டன் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்த தமிழக பொலிசார் சேகரை கைது செய்யாமல் மன்னிப்பு கோரும்படி கேட்டனர்.
ஆனாலும் அந்த திமிர் பிடித்த சேகர் மன்னிப்பு கோரவில்லை. மாறாக போனால் போகுது என்று வருத்தம்தான் தெரிவித்திருக்கிறார்.
மன்னிப்பு என்பது செய்த தவறை உணர்ந்து கேட்பது. வருத்தம் என்பது துயர சம்பவத்திற்கு தெரிவிப்பது. இதுகூடவா நீதிமன்றத்திற்கு தெரியவில்லை?
ஆனாலும் இந்தக் கூத்தை எல்லாம் நீதிமன்றமும் அனுமதித்தது. நல்லவேளை சேகரும் பிரசாந்த் பூஷன் போல் மன்னிப்பு கேட்க மறுத்திருந்தால் ஒரு ரூபா தண்டனை வழங்கி அதனைக் கட்டும்படி நீதிமன்றம் கெஞ்சியிருக்கும்.
நீதிமன்றத்திற்கு அத்தகைய ஒரு நிலையை ஏற்படுத்தாமைக்கு வேண்டுமானால் சேகரைப் பாராட்டலாம்.
No comments:
Post a Comment