Monday, October 26, 2020
திம்பு பேச்சுவார்த்தையின்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பது.
திம்பு பேச்சுவார்த்தையின்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பது.
அப்போது இலங்கை அரசு சார்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் சகோதரர் “அவர்களைப் பற்றி நீங்கள் ஏன் அக்கறைப்படுகிறீர்கள்?” என கேட்டார்.
ஆனால் கலந்துகொண்ட அனைத்து தமிழ் பிரதிநிதிகளும் அக் கோரிக்கையில் ஒருமித்து உறுதியாக இருந்தனர்.
அதன்பின்னர்தான் ஜனாதிபதி ஜே.ஆh.; ஜெயவர்த்தனா மலையக தமிழ் மக்களுக்கு குடியுரிமை வழங்கினார்.
இதை மலையக மக்களின் தலைவர் தொண்டைமானே நன்றியுடன் நினைவு கூர்ந்தும் இருக்கிறார்.
இங்கு கவனிக்கவேண்டிய விடயம் என்னவெனில் மலையக தமிழ் மக்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்திய அந்த தமிழ் பிரதிநிதிகள் அனைவரும் வடக்கு கிழக்கு தமிழர்களே.
அனைத்து இயக்கங்களும் மலையக இளைஞர்களை உள்வாங்கியிருந்தன. ஈரோஸ், ஈபிஆர்எல்எவ் போன்ற இயக்கங்கள் மலையகத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கிய ஈழத்தை தீர்வாக முன்வைத்திருந்தன.
1985ல் “மலையக மக்கள் விடுதலை முன்னணி” என்ற அமைப்பை உருவாக்கி மலையக தமிழ் மக்களின் போராட்டத்திற்கு வழி சமைத்தவர் தோழர் நெப்போலியன்.
அந்த மலையக மண்ணிலேயே இந்திய உளவுப்படையினரால்; கொல்லப்பட்டவர் இந்த தோழர் நெப்போலியன். இவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழரே
மலையகத்தில் சயனைட் அருந்தி மரணமடைந்த வரதன் என்ற போராளியும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழரே.
எனவே யாழ்ப்பாண தமிழர்கள் மலையக தமிழர்கள் பற்றி அக்கறை கொள்ளவில்லை என்று புதிய வரலாறு எழுத முனைபவர்கள் இவற்றுக்கு பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment