Sunday, December 20, 2020
பலே! கோத்தா பலே!
•பலே! கோத்தா பலே!
மகரம சிறைச்சாலையில் 108 பேருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டமையினால் அது குறித்து அரசு எந்த பொறுப்பான நடவடிக்கையும் எடுக்காததால் அங்கிருந்த கைதிகள் சிலர் பயத்தில் தப்ப முயற்சி செய்துள்ளனர்.
நோய் தொற்று குறித்து நம்பிக்கை அளிக்கும் நடவடிக்கைகள் எதையும் எடுக்காத அரசு அங்கிருந்த எட்டு கைதிகளை சுட்டுக் கொன்றுள்ளது. 127 பேருக்கு கடுமையான காயம் எற்பட்டுள்ளது.
சிறைக்கு வெளியே கைதிகளின் உறவினர்கள் பொலிசாரின் காலில் விழுந்து கெஞ்சுகின்றனர். மன்றாடுகின்றனர்.
ஆனால் அரசோ சிறைத்துறை அமைச்சருக்கு மேலதிகமாக கொரோனோ அமைச்சு பதவியும் வழங்கியுள்ளது.
உலகில் ஒரு நோய்க்கு அமைச்சு பதவி வழங்கியிருக்கும் முதல் அதிசய நாடு இலங்கை ஆகும். அதைக்கூட சிறையில் கொரோனோவினால் கலவரம் ஏற்பட்டு எட்டுப் பேரைக் கொன்றவருக்கு வழங்கியுள்ளது.
அதாவது இனி வெளியிலும் யாராவது கொரேர்னோ என்றால் கொல்லும்படி ஜனாதிபதி ஆசீர்வாதம் வழங்கியுள்ளார்.
புலிகளை அடக்கியது போன்று கொரோனோவையும் அடக்குவோம் என்று ராணுவ தளபதி கூறிய போது நாம் அதை சீரியஸாக எடுக்கவில்லை.
ஆனால் போற போக்கைப் பார்த்தால் எல்லோரையும் கொன்று புதைத்து கொரோனோவை ஒழிக்க நினைக்ககிறார்கள் போல் தெரிகிறது.
பாவம் இலங்கை மக்கள்!
No comments:
Post a Comment