Sunday, December 20, 2020
இந்த நாசமாய்போன அமைச்சர்களுக்கு
•இந்த நாசமாய்போன அமைச்சர்களுக்கு
கொரோனோ வந்து தொலைக்காதா?
ஒருபுறம் கொரோனோ. மறுபுறம் புயல் மழை வெள்ளம் என மக்கள் திண்டாடுகிறார்கள்.
அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகள்கூட இதுவரை வழங்க அரசு முன்வரவில்லை.
கொரோனோவை கட்டுப்படுத்த வேண்டிய சுகாதார அமைச்சரோ மந்திரித்த குடத்தை ஆற்றில் போட்டு தன் கடமையை முடித்துக் கொண்டுள்ளார்.
இதன் பின்னர் கொரோனோ நோய்க்கு என ஒரு அமைச்சரை ஜனாதிபதி கோத்தா நியமித்தார்.
அதுவும்கூட சிறையில் கொரோனோவை கட்டுப்படுத்த முடியாமல் நாலு கைதிகளை சுட்டுக்கொன்றவருக்கு இந்த அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சரோ தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்.
நீதி அமைச்சரோ தன் அலுவலகத்திற்கு இரண்டு வருட வாடகையாக 40 கோடி ரூபா ஒதுக்கியுள்ளார்.
அதாவது நீதி அமைச்சரின் அலுவலகத்தின் மாதாந்த வாடகை ஒரு கோடியே 67 லட்ச ரூபா ஆகும்.
இந்த பணத்திற்கு இலங்கையில் ஒரு கட்டிடத்தையே மொத்தமாக வாங்கிவிட முடியும்.
மக்களுக்கு நிவாரணம் கொடுக்காமல் ஒரு அமைச்சர் அதுவும் நீதி அமைச்சரே நியாயமில்லாமல் இப்படி நடந்துகொள்கிறார்.
உலகில் எல்லாம் கொரோனோவினால் இறந்த முஸ்லிம்களை அவர்கள் மத வழக்கப்படி புதைப்பதற்கு அரசுகள் அனுமதிக்கின்றன.
ஆனால் இலங்கையில் மட்டும் வேண்டுமென்றே அரசு புதைப்பதற்கு அனுமதியளிக்க மறுக்கிறது.
நீதி அமைச்சர் ஒரு முஸ்லிம். தன் இனத்திற்கே இழைக்கப்படும் அநியாயத்தை அவரால் தட்டிக் கேட்க முடியவில்லை.
ஆனால் கொஞ்சம்கூட கூச்சமின்றி இந்த நீதி அமைச்சர் தன் அலுவல வாடகைக்கு 40 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளார்.
இந்த நாசமாய்போன அமைச்சர்களுக்கு கொரோனோ வந்து தொலைக்காதா?
No comments:
Post a Comment