தீவிரம் (சினிமா)
ஒரு முஸ்லிம் இளைஞன் தன் தந்தையை கொன்றவர்களை பழி வாங்குவதற்காக அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்ல திட்டமிடுவதை விரிவாகவும் விபரமாகவும் காட்டியிருக்கிறார்கள்.
முஸ்லிம் தீவிரவாதம் அப்பாவி மக்களை இலக்கு வைப்பதாக காட்டியவர்கள் அந்த முஸ்லிம் தீவிரவாதம் உருவாகக் காரணமான இந்து பயங்கரவாதம் பற்றியோ அல்லது அரச பயங்கரவாதம் பற்றியோ காட்டத் தவறிவிட்டார்கள்.
நியூட்டனின் மூன்றாம் விதிப்படி எந்தவொரு தாக்கத்திற்கும் மறு தாக்கம் உண்டு. எனவே மறு தாக்கத்தை நிறுத்த வேண்டும் என்றால் அதற்கு காரணமான தாக்கத்தை முதலில் நிறுத்த வேண்டும்.
இதுதான் ஈழத்திலும் நடந்தது. போராளிகளை பயங்கரவாதிகள் என்றுகூறி பல நாடுகள் ஒன்று சேர்ந்து அழித்தார்கள். ஆனால் அப் போராளிகள் உருவாகக் காரணமான சிங்கள அரச பயங்கரவாதம் குறித்து யாருமே அக்கறை கொள்ளவில்லை.
No comments:
Post a Comment