Saturday, January 30, 2021
மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்கம்!
•மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்கம்!
ஒருபுறம் இந்திய அரசு குடியரசுதினவிழா கொண்டாடுகிறது.
மறுபுறத்தில் தமிழ் மக்கள் தமது மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூருகின்றனர்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் நம்பிக்கையுடன் பங்கெடுத்தவர்கள் தமிழ் மக்கள்.
ஆனால் சுதந்திரம் பெற்றபின் அமைந்த இந்திய அரசோ தமிழ் மக்களையும் அவர்களின் தமிழ் மொழியையும் நசுக்க முனைகின்றன.
அதனால் இந்தியை திணிக்க முயலும் இந்திய அரசுக்கு எதிராக எண்ணற்ற தியாகிகள் தமது இன்னுயிரை ஈர்த்தனர்.
உலகில் தோன்றிய எத்தனையோ மொழிகள் அழிந்த நிலையில் தமிழ் மக்களின் தமிழ் மொழி அழியாமல் இருக்க காரணம் தமிழ் மக்களின் மொழி உணர்வே.
தமிழ் மக்கள் தமது தாய் மொழியையும் தாய் மண்ணையும் தமது இரு கண்ணுக்கு ஒப்பாக கருதுபவர்கள்.
அதனால்தான் பொங்கு தமிழுக்கு இன்னல் நேர்ந்தால் சங்காரம் நிஜம் என்று சங்கே முழங்கு என்று கவிதை பாடி வைத்திருக்கிறார்கள்.
இந்தி மொழியை எதிர்த்து தமிழ்மொழி காக்கும் போரில்உயிர் நீத்த ஈகிகள் பட்டியல்:
1. நடராசன், இறப்பு: 15.1.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார்.
2. தாலமுத்து, இறப்பு: 12.3.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார்.
3. கீழப்பழுவூர் சின்னச்சாமி, பிறப்பு: 30.7.1937, இறப்பு: 25.1.1964, காலை 4.30 மணிக்கு திருச்சியில் தீக்குளித்தார்.
4. கோடம்பாக்கம் சிவலிங்கம், இறப்பு: 26.1.1965, சென்னையில் தீக்குளித்தார்.
5. விருகம் பாக்கம் ஏ.அரங்கநாதன், பிறப்பு: 27.12.1931, இறப்பு: 27.1.1965, கோடம்பாக்கம் தொடர்வண்டி திடலில் தீக்குளித்தார்.
6. சிவகங்கை இராசேந்திரன், மாணவர். பிறப்பு: 16.7.1945, இறப்பு: 27.1.1965, சிதம்பரம் அண்ணாமலை நகரில் காவலரால் சுடப்பட்டு இறந்தார்.
7. கீரனூர் முத்து, பிறப்பு: 15.1.1943, இறப்பு: 27.1.1965, கீரனூரில் நஞ்சுண்டு மாண்டார்.
8. சத்தியமங்கலம் முத்து, பிறந்த ஆண்டு: 1943, இறப்பு: 11.2.1965, சத்தியமங்கலத்தில் தீக்குளித்தார்.
9. ஆசிரியர் வீரப்பன், பிறப்பு: 1.4.1938, இறப்பு: 11.2.1965, அய்யம்பாளையத்தில் தீக்குளித்தார்.
10. விராலிமலை சண்முகம், பிறப்பு: 11.8.1943, இறப்பு: 25.2.1965, விராலிமலையில் நஞ்சுண்டு இறந்தார்.
11. கோவை பீளமேடு தண்டபாணி, பி.ஈ.படித்தவர், பிறந்த ஆண்டு: 1944, இறப்பு: 2.3.1965, பீளமேட்டில் நஞ்சுண்டு இறந்தார்.
12. மாயவரம் சாரங்கபாணி, பி.காம்.மாணவர், பிறந்த ஆண்டு: 1945, இறப்பு 15.3.1965, மயிலாடுதுறையில் தீக்குளித்தார்.
No comments:
Post a Comment