Saturday, February 27, 2021
இலங்கையில் யாருக்கு சுதந்திரம் இருக்கிறது?
இலங்கையில் யாருக்கு சுதந்திரம் இருக்கிறது?
• இலங்கை முழுவதையும் ஆக்கிரமித்து சுரண்டுவதற்கு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மட்டுமன்றி அமெரிக்காவுக்கும்கூட சுதந்திரம் இருக்கிறது.
• தமது பதவி நலன்களுக்காக இலங்கையை விற்பதற்கு ஆட்சியாளர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது.
• தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ய மகிந்த குடும்பத்திற்கு சுதந்திரம் இருக்கிறது.
• தமிழ் மக்களை கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்யவும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருக்கவும் கோத்தபாயாவுக்கு சுதந்திரம் இருக்கிறது.
• தன் ஆசைக்கு இணங்கவில்லை என்பதற்காக பெண்ணின் காதலனை கொலை செய்ய மகிந்தவின் மகனுக்கு சுதந்திரம் இருக்கிறது.
• பிரித்தானிய ராணியின் குதிரையை வாங்கி கெலிகொப்டரில் சென்று நுவரேலியாவில் குதிரைச் சவாரி செய்ய மகிந்தவின் இன்னொரு மகனுக்கு சுதந்திரம் இருக்கிறது.
• அரசுக்கு எதிராக போராடும் மாணவர்களையும் தொழிலாளர்களையும் சுட்டு அடக்குவதற்கு இலங்கை படைகளுக்கு சுதந்திரம் இருக்கிறது.
சிங்கள மக்களுக்கு ஒரு வேண்டுகோள்!
இலங்கையில் மக்களுக்கு சுதந்திரம் இல்லை. எனவே இன்னொரு சுதந்திரப் போராட்டத்தை இலங்கை மக்கள் அனைவரும் நடத்த வேண்டியுள்ளனர்.
இந்தியாவில் ஜின்னா கேட்டதுபோல் இலங்கையில் தமிழ் மக்கள் 1948ல் பிரிவினை கோரவில்லை என்பதை உணர வேண்டும்.
அதுமட்டுமல்ல காஸ்மீரில் சில அமைப்புகள் தம்மை பாகிஸ்தானுடன் இணைக்குமாறு கோருகின்றனர். ஆனால் இன்றுவரை ஒரு தமிழ் அமைப்புகூட தம்மை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று கோரவில்லை.
இந்தளவு உணர்வுமிக்க தமிழ் மக்களை தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதிக்குமாறு கெஞச வேண்டிய நிலையில் இலங்கை ஆட்சியாளர் தள்ளியுள்ளனர்.
குறிப்பு - ஒரு இனத்தை அடக்கி ஆள முற்படும் எந்தவொரு இனமும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது. எனவே சிங்கள மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் தமிழ் மக்களின் சுதந்திரத்தை முதலில் அங்கீகரிக்க வேண்டும்.
No comments:
Post a Comment