Saturday, February 27, 2021
தமிழ் மக்களின் போராட்டங்கள
தமிழ் மக்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தாதீர்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சிறிசேனாவே கூறும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது.
ஆனாலும் சிங்கள அரசு திருந்தவில்லை. மாறாக தேசியகீதம் தமிழில் பாடுவதை தடை செய்துள்ளது.
வேறுவழியின்றி தமிழ் மக்கள் போராட்டம் மூலம் பதில் அளிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
சுதந்திரநாளை கரிநாளாக அறிவித்து உண்ணாவிரத போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை போராட்டம் தொடர்கிறது. பல தடைகளைத் தாண்டி அக்கரைப்பற்றை கடந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன.
தாயகத்தில் நடக்கும் மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக கனடாவிலும் பிரான்சிலும் புலம்பெயர் மக்கள் போராட்டம் நடைபெற உள்ளதாகவும் அறிய வருகிறது.
மக்கள் போராட்டம் தொடர்கிறது. போராட்டம் பரவுகிறது. போராட்டம் வெற்றி பெறும். ஏனெனில் போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை.
செய்தி - சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அத்தினத்தைக் கரிநாளாகவும் கறுப்புப்பட்டி அணிந்தும் அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுத்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அடையாள உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது,
இந்தக் கரிநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம், இன்று (02) முதல் 6ஆம் திகதி வரையிலும் நான்கு நாள்களுக்கு, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்து.
No comments:
Post a Comment