Saturday, March 27, 2021
ஒருவர் தமிழ்யுவதி.
ஒருவர் தமிழ்யுவதி. இப்போது சுவிஸில் இருக்கிறார்.
இன்னொருவர் சிங்கள யுவதி. இலங்கையில் இருக்கிறார்..
தமிழ்யுவதி தனது இனத்திற்கு நடந்த கொடுமைகளை சித்திரமாக வரைந்தார். அவருக்கு பாராட்டும் பரிசும் கிடைத்தது.
சிங்கள யுவதி தன் காடு அழிக்கப்படுவது குறித்து வருத்தப்பட்டார். உடனே அவர் வீட்டுக்கு பொலிஸ் சென்று அச்சுறுத்தியுள்ளது.
அதுமட்டுமன்றி காடு அழிப்பது தொடர்பாக கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் வைக்கப்பட்ட ஓவியம் அகற்றப்பட்டுள்ளது.
இவ் ஓவியம் பொலிஸ் மற்றும் மாநகரசபையின் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜனாதிபதி அலுவலக உத்தரவின் பேரில் தற்போது அகற்றப்பட்டுள்ளது.
இலங்கை ஒரு ஜனநாயகநாடு. இங்கு பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் எல்லாம் இருக்கிறது என்கிறார்கள்.
ஆனால் ஒரு சிங்கள ஜனாதிபதியினால் சிங்கள மக்களின் கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகிறது.
இது எப்படி நிகழ்கிறது என்று ஆச்சரியப்படுபவர்கள் தமிழ்நாட்டில் தமிழ் முதலமைச்சர் எடப்பாடியின் தமிழ் பொலிஸ் தூத்துக்குடியில் 12 தமிழர்களை சுட்டுக்கொன்றதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment