•சங்கத்தலைவன்
தோழர் பாரதிநாதன் அவர்களின் தறி நாவல் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது.
பொலிஸ் மற்றும் அரசு அராஜகம் பற்றிய படங்களை துணிவோடு தந்துகொண்டிருக்கும் வெற்றிமாறன் அவர்களுக்கு முதலில் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
தறி நாவல் வந்தபோதே அதை வாசித்து அது பற்றிய என் கருத்தையும் முகநூலில் பகிர்ந்திருந்தேன்.
தெரிந்த கதை மட்டுமல்ல களம்கூட அறிந்ததே. ஆனாலும் ஆர்வம் குன்றாமல் பார்க்க முடிகிறது.
பிரச்சார நெடி கொஞ்சம் தூக்கலாக இருப்பதுபோல் தோன்றினாலும் இத்தகைய கதைக் களத்தில் இது தவிர்க்க முடியாததே.
ஒரு புரட்சிகர நாவல் வெளிவருலதும் அது திரைப்படமாக தயாரிக்கப்படுவதும் தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானதே.
வாழ்த்துக்கள். முடிந்தவர்கள் ஒருமுறை பார்த்துவிடுங்கள்.
No comments:
Post a Comment