மண்டேலா
இது படம் அல்ல. பாடம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்தளவுக்கு தேர்தல் கூத்துக்களை கிழித்து தொங்க விட்டிருக்கிறார்கள்.
ஒரு கிராமத்தில் இரண்டு வேட்பாளர்கள் ஒரு வோட்டைப் பெறுவதற்காக செய்யும் கூத்துகளை நகைச்சுவையாக காட்டியிருக்கிறார்கள்.
ஆனால் வேதனை என்னவெனில் படத்தில் நகைச்சுவையாக காட்டியதைவிட நிஜத்தில் நடக்கும் கூத்துகள் அதிக மோசமாக இருக்கிறது.
தேர்தல் நேரத்தில் வந்திருப்பதால் நிஜத்துடன் ஒப்பிட்டு ரசிக்க முடிகிறது.
படத்தில் சுப்பர் ஸ்டார்கள் இல்லை. பறந்து பறந்து சண்டை இல்லை. வெளிநாட்டில் டூயட் பாட்டு இல்லை.
ஆனாலும் சலிப்பு இன்றி ரசித்து பார்க்க முடிகிறது.
இவ்வாறான படங்களை பார்த்து ஆதரவளிப்பதன் மூலமே தொடர்ந்தும் இவ்வாறான படங்கள் வெளிவருவதற்கு உதவ முடியும்.
படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.
No comments:
Post a Comment