Thursday, April 29, 2021
இறந்தவர்களுக்கு நீதி கிடைக்க
•இறந்தவர்களுக்கு நீதி கிடைக்க
நாம் உரத்து குரல் எழுப்புவோம்!
என்ன செய்தாலும் இறந்தவர்கள் திரும்பி வரப்போவதில்லை என்பது உண்மைதான். குறைந்த பட்சம் அவர்களுக்கான நீதியையாவது நாம் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
குண்டுகள் வெடித்து இரண்டு வருடங்களாகிவிட்டன. ஆனால் அதில் கொல்லப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை.
யாருடைய தலைமையில் குண்டு வெடிப்புகள் நடந்தது என்று இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. குண்டு வெடிப்பிற்கு தேவையான வெடி மருந்து எங்கிருந்து வந்தது என்று அறியப்படவில்லை.
ஆக மொத்தத்தில் இந்த குண்டு வெடிப்பிற்கான காரணம் என்ன என்பதுகூட இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை என்பதே மிக வேதனையான விடயம் ஆகும்.
இது மத பின்புலம் கொண்ட குண்டு வெடிப்பு அல்ல. இது அரசியல் பின்புலம் அதுவும் சர்வதேச அரசியல் பின்புலம் கொண்ட குண்டு வெடிப்பு என்கிறார் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் டிபர்ணாந்து அவர்கள்.
அவர் இங்கு சர்வதேச அரசியல் பின்புலம் என்று கூறுவது இந்தியாவையே. அதாவது மோடி பதவிக்கு வருவதற்காக இந்திய புலனாய்வு அமைப்புகள் நடத்திய குண்டு வெடிப்பு என்பதே அவரது கருத்தாக இருக்கிறது.
இந்த கருத்து கிருத்தவ பேராயருக்கு மட்டுமல்ல பல அரசியல்வாதிகளுக்கும் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் நேரிடையாகவே இந்தியாவை குற்றம் சாட்டியிருந்தார்.
இவர்கள் கூறவது உண்மைதானோ என்று நம்ப வேண்டியிருக்கிறது. ஏனெனில் இது வெறும் மத நோக்கத்திற்காக செய்யப்பட்ட கண்டு வெடிப்பு எனில் இந் நேரம் விசாரணை மூலம் உண்மைகளை பொலிஸ் அதிகாரிகள் கொண்டு வந்திருப்பர்.
இது இந்தியா சம்பந்தப்பட்ட குண்டு வெடிப்பு என்பதால்தான் இன்னமும் உண்மைகள் வெளிவரவில்லை. இனியும்கூட இது குறித்த உண்மைகள் வெளிவருமா என்பது சந்தேகமே.
இந்நிலையில் கொழும்பு ஆயர் இது குறித்து சர்வதேச விசாரணை கோரப்போவதாக அறிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் படுகொலைகள் குறித்து மன்னார் ஆயர் ராயப்பு அவர்கள் சர்வதேச விசாரணை கோரியபோது அதனைக் கண்டித்தவர் இந்த கொழும்பு ஆயர்.
கொல்லப்பட்டவர்கள் கத்தோலிக்க கிருத்தவர்கள் மட்டுமல்ல அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். அதனால்தான் இன்னும் அவர்களுக்குரிய நீதி வழங்கப்படவில்லை.
No comments:
Post a Comment