Saturday, February 26, 2022
சர்வதேச தாய் மொழி தினம்! (21.02.2022)
•சர்வதேச தாய் மொழி தினம்! (21.02.2022)
எல்லோருக்கும் அவர்களது தாய்மொழி பெருமை மிக்கதுதான்.
ஆனால் மொழிகளின் தாய் மொழி என்ற பெருமை எமது தமிழ் மொழிக்கு உண்டு.
தமிழ் மொழியாலேதான் நாம் தமிழ் இனம் ஆனோம்.
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் முதலில் அதன் மொழியை அழிக்க வேண்டும் என்பார்கள்.
அதனால்தான் தமிழர்கள் தம் உயிரைக் கொடுத்தேனும் தமிழ் மொழியை காத்து வருகிறார்கள்.
மொழி என்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் வெறும் ஊடகம்தானே, அதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என சிலர் கேட்கலாம்.
உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து விட்டன. தமிழும் இனி மெல்ல சாகும் என சிலர் கூறலாம்.
ஆனால் வரலாற்றில் எத்தனை படையெடுப்புகள். அத்தனையும் தாண்டி தமிழ் மொழி எப்படி நிமிர்ந்து நிற்கிறது?
போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர்கள் 350 வருடங்களுக்கு மேலாக ஆண்டபோதும் அவர்களின் சில சொற்களை தமிழ் உள்வாங்கியதேயொழிய தமிழ் அழிந்து விடவில்லை.
இனியும்கூட எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் தமிழ் அழிந்துவிடப் போவதில்லை. அது நிமிர்ந்து நிற்கும்.
ஏனெனில் தமிழர்கள் தம் தாய்க்காக மட்டுமன்றி தாய்மொழி தாய்நிலத்திற்காகவும் உயிர் துறக்கக்கூடியவர்கள்.
இப்படிப்பட்ட அர்ப்பணிப்புகள் இருக்கும்வரை தமிழ் மொழியையும் தமிழர்களையும் யாராலும் அழித்துவிட முடியாது.
தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் இந்தியா முழுவதும் பேசப்படும் மொழி சமஸ்கிருதம் என்றும் அதனை தமிழர்கள் எற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.
நாற்பதாயிரம் பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருத மொழியை தமிழ் மொழி பேசும் எட்டுக்கோடிப் பேர் எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்?
ஏனெனில் தமிழனை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அவனின் தமிழ் மொழியை அழிக்க வேண்டும் என்று எதிரி நன்கு தெரிந்து வைத்திருக்கிறான்.
கைபர் கணவாய் வழியாக வந்த இல.கணேசன் கும்பல்களுக்கு சமஸ்கிருதம் புனித மொழியாக இருக்கலாம்.
ஆனால் அதற்காக செத்த மொழியான சமஸ்கிருதத்தை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
No comments:
Post a Comment