ஒரு நாடு இன்னொரு நாட்டில் விடுதலைக்காக போராடிய இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என அறிவித்து தன் நாட்டில் தடை செய்கிறது.
ஆனால் அந்த நாட்டில் உள்ள மக்கள் அந்த தடை செய்யப்பட்ட இயக்க போராளிக்கு நினைவுக்குடை அமைத்து ஆண்டுதோறும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
இந்த அதிசயம் இந்தியாவில் தமிழ்நாட்டில் தமிழ் மக்களால் நிகழ்த்தப்படுகிறது.
நாடு என்பது மனிதனால் உருவாக்கப்படுவது. அதன் எல்லை காலத்திற்கு காலம் மனிதனால் சுருங்கும் விரியும்.
ஆனால் இனம் தானாக உருவாகியது. அது மனிதனால் உருவாக்கப்படும் நாட்டைவிட வலிமையானது.
இனம் அதன் மொழி மனிதனின் உணர்வுடன் இரண்டறக்கலந்து நிற்பது.
அதனால்தான் தடைகளைத் தகர்த்தெறிந்து புலிப் போராளிகளை தமிழக மக்கள் நினைவு கூர்கின்றனர்.
தமிழ் மக்கள் என்றும் மகத்தானவர்களே
No comments:
Post a Comment