"ஒருவரின் காலடியில் வாழ்வதைவிட எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல்" - சே குவாரா
இவன் சின்ன சிறுவன்தானே?
இவன் எறிவது வெறும் கல்லுதானே?
இவனால் என்ன சாதித்தவிட முடியும்?
என்று முதலில் நக்கலாக கேட்பார்கள்
சிறுவர்களை தூண்டிவிட்டு பெரியவர்கள் ஒளிந்திருப்பதாக
அப்புறம் கிண்டல் அடிப்பார்கள்
அதையும்தாண்டி இவன் எறிந்து விட்டாலோ
இவனை “குழந்தை போராளி” என்பார்கள்.
இறுதியாக இவனை கொன்றுவிட்டு
இலன் தந்தை ஒரு பயங்கரவாதி.
எனவே இவனும் பயங்கரவாதி என்பார்கள்.
இங்கு அவர்களுக்கு அச்சமூட்டுவது என்னவெனில்
இவன் கல் எறிகிறான் என்பதல்ல – மாறாக
இவன் அவர்களுக்கு அடங்க மறுக்கிறான் என்பதே!
No comments:
Post a Comment