Wednesday, April 27, 2022
கலைஞர் தத்தெடுத்து வளர்த்த ஈழ அகதிச் சிறுவன் எங்கே?
• கலைஞர் தத்தெடுத்து வளர்த்த ஈழ அகதிச் சிறுவன் எங்கே?
எம்.ஜி.ஆர் மலையாளி என்றும் அவருக்கு ஈழத் தமிழர் மீது அக்கறை இல்லை என்றும் தனக்கு மட்டுமே ஈழத் தமிழர் மீது அக்கறை என்று காட்டுவதற்காக கலைஞர் ஒரு ஈழ அகதிச் சிறுவளை 1984ம் ஆண்டு தத்தெடுத்தார்.
அச் சிறுவனுக்கு மணி என்று பெயர் சூட்டினார். கனிமொழிக்கு தம்பி இல்லை என்ற குறை நீங்கிவிட்டதாகவும் அப்போது கூறினார்.
இப்போது இந்த அகதிச் சிறுவன் எங்கே என கேட்டு டிவிட்டரில் பதிவு இட்டிருந்தேன். அதற்கு நான் கலைஞர் மீது அபாண்டமாக பொய் கூறுவதாக உ.பிஸ் கள் பதில் இட்டனர்.
எனவே நான் இந்த அகதிச் சிறுவன் எங்கே என்று கேட்டு பரிதிஇளம்வழுதி ஆனந்த விகடனுக்கு வழங்கிய பேட்டியை ஆதாரமாக காட்டினேன்.
அதற்கு “ஏன் இத்தனை நாளாக கேட்கவில்லை. இப்போது ஸ்டாலின் பதவிக்கு வந்ததும் அவருக்கு இழுக்கு வருவதற்காக கேட்கிறீர்களா?” என கேட்கின்றனர்.
அதற்கு நான் “ இல்லை. கலைஞர் உயிருடன் இருக்கும்போதே கேட்டிருக்கிறேன். இதோ இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய என் மனு” என்று 03.07.2015 யன்று அனுப்பிய மின்னஞ்சலைக் காட்டினேன்.
அதற்கு பதில் அளிக்காமல் நான் முதல்வர் ஸ்டாலின் மீது கொலைக் குற்றச்சாட்டு வைப்பதாகவும் என்னை கைது செய்ய வேண்டும் என்றும் அந்த உ.பிஸ் என்னை மிரட்டுகிறார்கள்.
இதற்கு நான் “தாராளமாக என்னை கைது செய்யுங்கள். அப்படியாவது அந்த அகதிச் சிறுவன் எங்கே என்ற என் கேள்விக்கு நீதிமன்றத்திலாவது பதில் கிடைக்கட்டும்;” என்று அவர்களுக்கு கூறியுள்ளேன்.
சென்னையில் இருந்து மூத்த பத்திரிகையாளர் டி.வி.சோமு என்னிடம் பேட்டி காண முயன்றபோது இந்த அகதிச் சிறுவன் தத்தெடுத்த விடயம் பற்றி எழுதும்படி கூறினேன்.
அப்புறம் அவரே பரிதிஇளம்வழுதியின் கைத்தொலைபேசி இலக்கம் தந்தார். பரிதியுடன் இரண்டுமுறை இது தொடர்பாக பேசினேன்.
அப்போதுதான் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டி வரும் என்பதற்காக அச் சிறுவன் கொல்லப்பட்டுவிட்டதாக அவர் மூலம் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
( ஆதாரங்கள் கீழே பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது)
No comments:
Post a Comment