Wednesday, July 27, 2022
தோழர் சாருமஜீம்தார் அவர்களுக்கு வீர வணக்கம்.
தோழர் சாருமஜீம்தார் அவர்களுக்கு வீர வணக்கம்.
கொன்று புதைத்தால் மீண்டும் முளைத்து எழுவர்.
வெட்டி எறிந்தால் கடல் அலைபோல் மீண்டு வருவர்
- செர பண்டாயி
மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரி மாவட்டத்தில் நக்சல்பாரி என்ற கிராமத்தில் எழுந்த விவசாயிகளின் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கம் இந்திய துனைகண்டம் முழுவதும் பேரலைகளை எழுப்பியது.
”வசந்தத்தின் இடி முழக்கம்” என்று வர்ணிக்கப்பட்ட அந்த எழுச்சியின் நாயகன் தோழர் சாரு.
தோழர் சாருமஜீம்தார் அவர்களின் நினைவுகள் அழிவதில்லை.
1972ல் படுகொலை செய்யப்பட்ட தோழர் சாரு அவர்களுக்கு வீர வணக்கம்.
தோழர் சாருவை கொலை செய்வதன் மூலம் புரட்சியாளர்களான நக்சலைட்டுகளை ஒழித்துவிட முடியும் என இந்திய அரசு நினைத்தது.
நக்சலைட்டுகளை ஒழிப்பதற்காக மேலும் 7 பட்டாலியன்களை இந்திய அரசு உருவாக்கியுள்ளது.
எத்தனை பட்டாலியன்களை உருவாக்கி எத்தனை பேரை சுட்டுக் கொன்றாலும் நக்சலைட்டுகளை ஒருபோதும் ஒழிக்க முடியாது.
சொந்த மக்களை கொல்வதற்காக மேலும் மேலும் படைகளை உருவாக்கும் ஒரே ஜனநாயகநாடு(?) உலகில் இந்தியா மட்டுமே.
நக்சலைட்டுகள் தேச விரோதிகள் அல்லர். அவர்கள் தேச பக்தர்கள் என்று இந்திய உச்ச நீதிமன்றமே தெரிவித்திருக்கிறது.
ஆனால் இந்திய அரசோ நக்சலைட்டுகளை ஒழிப்பதாக கூறிக்கொண்டு அப்பாவி மக்கள் மீது யுத்தம் நடத்துகிறது.
ஏழை மக்களின் அபிவிருத்திக்கு பணம் ஒதுக்க மறுக்கும் இந்திய அரசு, அந்த ஏழை மக்களை ஒழிப்பதற்காக படைகளை உருவாக்க பணம் ஒதுக்கிறது
.
இந்த அநியாயத்தை இன்னும் எத்தனை நாளைக்கு இந்திய மக்கள் அனுமதிக்கப் போகின்றார்கள்?
இந்த அவலத்திற்கு எப்போது இந்திய மக்கள் முடிவு கட்டப் போகிறார்கள்?
No comments:
Post a Comment