நிருபர் - தூத்துக்குடியில் மக்கள் போராடினால் அது மக்கள் புரட்சி என்கிறீர்கள். கள்ளக்குறிச்சியில் மக்கள் போராடினால் கலவரம் என்கிறீர்கள். கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்கிறீர்கள். அதெப்படி சார்?
சின்னவர் - அது அப்படித்தான். எப்படி என்று கேள்வி கேட்டால் அப்புறம் பாஜக உள்ளே வந்திடும். பரவாயில்லையா?
நிருபர் - அதாவது நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது மக்கள் போராடினால் அது மக்கள் புரட்சி. ஆனால் அதே மக்கள் உங்கள் ஆட்சியில் போராடினால் கலவரம். அப்படித்தானே சார்?
சின்னவர் - என்னை “சின்னவர்” என்று என் உடன்பிறப்புகள் அழைப்பது உங்களுக்கு எரிச்சல். அதுதான் இப்படி கேட்கிறீர்கள்.
நிருபர் - ?????
No comments:
Post a Comment