Wednesday, November 30, 2022
மனோ கணேசன் அமைச்சராக இருந்தபோது
மனோ கணேசன் அமைச்சராக இருந்தபோது தமிழ் அரசியல் கைதி தேவதாசன் உண்ணாவிரதம் இருந்தபொழுது சிறைக்குள் சென்று 3 நாட்களில் அவர் கோரிக்கை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
மூன்று வருடமாகிவிட்டது. இன்னும் தேவதாசன் சிறையில்தான் இருக்கிறார். தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசியல்வாதி மனோ கணேசன் இப்போது தமிழ் அரசியல் தலைவர்களை குறை கூறுகிறார்
எனக்கு தெரிந்து எந்த தமிழ் அரசியல் தலைவர்களும் கலைஞர் கருணாநிதி மேல் எல்லா பழியையும் போடவில்லை. அப்படியிருக்க இவ்வாறு மனோ கணேசன் கூறுவது கலைஞரும் இந்திய அரசும் தமிழ் மக்களுக்கு இழைத்த துரோகத்தை மறைக்க முயல்வதாகவே உள்ளது.
இந்தியா தீர்வு தர முன்வந்ததாகவும் ஆனால் தமிழ் தலைவர்கள் அதை பெற தவறிவிட்டனர் என்று மனோ கணேசன் குறை கூறுகின்றார். சரி பரவாயில்லை மனோ கணேசனும் அரசியல்வாதிதானே, அவர் இந்திய அரசு மூலம் தனது மலையக மக்களுக்கு இதுவரை பெற்றுக்கொடுத்த தீர்வு என்ன?
மனோ கணேசனுக்கு அமைச்சு பதவி இல்லாமல் இருப்பது கஸ்டம்தான். அவர் தாராளமாக ரணில் உடன் டீல் பேசி பதவி பெற்றுக்கொள்ளட்டும். ஆனால் அதற்காக கலைஞருக்கும் இந்திய அரசுக்கும் வெள்ளை அடிக்க முயல வேண்டாம்.
No comments:
Post a Comment