நான் பல கடைகளில் டீ குடித்திருக்கிறேன். ஆனால் நெல்லியடியில் “நாணா” கடையில் குடித்த டீ போல் ஒரு டீயை இன்னும் குடிக்கவில்லை.
1980களில் கரவெட்டியில் இளைஞராக இருந்தவர்களுக்கு இந்த கடை நன்கு நினைவில் இருக்கும். ( திருமகள் ஸ்டோருக்கு அருகில் இக் கடை இருந்தது)
ஒரு சிறிய பெட்டிக்கடை. நானா என்ற ஒரு முஸ்லிம்தான் கடை ஓனர். அவர்தான் டீ மாஸ்டரும்கூட.
அந்த காலத்தில் அரசியல் ஆர்வம் மிக்க இளைஞர்கள் எல்லாம் மாலை நேரத்தில் அவர் கடையடியில் கூடுவார்கள்.
அவர் கடை வடையும் பிளேன் டீ யும் பேமஸ். அதை சாப்பிட்டுக்கொண்டு அரசியல் பேசுவது எமது வழக்கம்.
அவர் டீ யில் சிறிதளவு கஞ்சா கலக்கிறார். அபின் கலக்கிறார் என்றெல்லாம்கூட சிலர் கூறினார்கள்.
நான் இவற்றை நம்பவில்லை. எனினும் இன்றுவரை அவர் டீ யின் ரகசியம் என்ன என்று எனக்கு புரியவில்லை?
No comments:
Post a Comment