Saturday, April 29, 2023
நான் தோழர் மாறனுடன் திருச்சியில் தங்கியிருந்த
நான் தோழர் மாறனுடன் திருச்சியில் தங்கியிருந்த வேளை ஒரு நாள் பெண்ணாடம் சென்று புலவர் கலியபெருமாளை சந்தித்தேன்.
நான் ஊர் திரும்பும் விடயத்தை கூறி விடை பெறுவதற்காக சென்றிருந்தேன். என்கூட மாறனும் வந்திருந்தார்.
அப்போது புலவர் தன் அருகில் இருந்த ஒரு இளைஞரைக் காட்டி அவருக்கு ஊருக்கு போகுமுன் சில பயிற்சிகளை வழங்க முடியுமா எனக் கேட்டார்.
அந்த இளைஞர் பெயர் இளங்கோ. அவர் கரூரைச் சேர்ந்தவர்.
கொடைக்கானலில் குண்டு வெடித்து மாறன் இறந்தபோது பலத்த காயங்களுடன் உயிர் தப்பியவர் இந்த இளைஞர் இளங்கோ.
புலவர் கேட்டுக்கொண்டபடி தோழர்கள் மாறன், இளங்கோ இருவருக்கும் புலவரின் தோட்டத்திற்கு அருகே உள்ள ஆற்றங்கரையில் பயிற்சி வழங்கினேன்.
அப்போது எமக்கு காவலுக்கு ஒரு துடிப்பான இளைஞரை புலவர் நியமித்திருந்தார். அவரை அன்று ஒருநாள்தான் நேரில் பார்வையிட்டிருந்தேன்.
ஆனால் இன்று வரையும் அவர் என் நினைவில் இருக்கிறார். ஏனெனில் அவர் பெயர். ஆம் அவர் பெயர் லெனின்.
இந்த லெனின்தான் பின்னர் தமிழ்நாடு விடுதலைப்படை தளபதியாகி காவல் நிலையங்களை வெடிகுண்டு வீசி தகர்த்தவர்.
முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தை தாக்க சென்றபோது குண்டு வெடித்து இந்த தோழர் லெனின் மரணமானார்
No comments:
Post a Comment