21.05.1991 ராஜீவ் மரணத்தின் பின் தமிழ்நாட்டில் ஈழத் தமிழருக்கு ஆதரவானவர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடா சட்டத்தில் அடைக்கப்பட்டார்கள்.
அப்போது 21.05.1992யன்று தமிழ்நாடு விடுதலைப்படையானது கும்பகோணம் தொலைக்காட்சி மற்றும் அஞ்சல் நிலையங்கள் மீது குண்டு தாக்குதல் நடத்தி தாணுவிற்கு அஞ்சலி செலுத்தியது.
இச் செய்தி இந்தியா எங்கும் அதிர்வை ஏற்படுத்தியது. அப்போது ஒட்டப்பட்ட போஸ்டரே கீழே உள்ளது.
இந்த தமிழ்நாடு விடுதலைப்படை ஈழத் தமிழருக்கு ஆதரவாக அரியலூரில் பாலத்தில் நடத்திய வெடிகுண்டு சம்பவமே விடுதலை படத்தில் ஆரம்பத்தில் காட்டப்பட்டது.
விடுதலை படம் வெளிவந்த பின்பு தமிழக தமிழர் மட்டுமன்றி ஈழத்தமிழர் மத்தியிலும் தமிழ்நாடு விடுதலைப்படை பற்றியும் அதன் தலைவர் தமிழரசன் பற்றியும் அறியும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment