Tuesday, June 27, 2023
விடுதலைப்புலிகள் இயக்கத்தை
விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பார்த்து அதேபோல் விடுதலைக்குயில்கள் என்னும் பெயரில் ஒரு இயக்கத்தை தமிழ்நாட்டில் ஆரம்பித்தவர் சுபவீ
அந்த அமைப்பின் செலவுகளுக்காக ஒரு சேட்டு நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் இதை ஒரு சாதாரண கொள்ளையாக நினைத்த பொலிசார் அதில் சம்பந்தப்பட்ட சில இளைஞர்களை பிடித்து விசாரணை செய்தபோது இது ஒரு இயக்கத்திற்காக நடத்திய கொள்ளை என்பதும் அதன் தலைவர் சுபவீ என்பதையும் அறிந்தனர்.
சுபவீயை பொலிசார் கைது செய்ய முயன்றபோது அந்த வழக்கில் இருந்து சுபவீயைக் காப்பாற்றியவர் கலைஞர்.
தன்னைக் காப்பாற்றிய கலைஞர் மீது சுபவீ விசுவாசமாக இருப்பது தவறில்லை.
ஆனால் அதற்காக அவர் கலைஞர் ஈழத் தமிழருக்கு செய்த துரோகத்தை எல்லாம் நியாயப்படுத்த முனைவது தவறு.
லண்டனில் ஈழத் தமிழர் அதிகமாக வாழும் ஈஸ்ட்காம் நகரில் வந்து கலைஞர் புகழ் பாட இருக்கும் சுபவீ அவர்களிடம் நாம் கேட்க விரும்புவது,
1990ல் கலைஞர் ஆரம்பித்த சிறப்புமுகாமை அவர் மகன் ஸ்டாலின் எப்போது மூடுவார்? அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை எப்போது விடுதலை செய்வார்?
சிறப்புமுகாம் பற்றி பதில் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, கலைஞர் தத்து எடுத்து வளர்த்த அந்த அப்பாவி அகதிச்சிறுவன் மணி எங்கே என்பதற்காவது மனசாட்சியுடன் சுபவீ பதில் தருவாரா?
No comments:
Post a Comment