இலங்கையில் பிரிந்து செல்வதற்கான உரிமை மாகாணசபைக்கு இல்லை.
இந்தியாவில் பிரிந்து செல்வதற்கான உரிமை மாநிலங்களுக்கு இல்லை.
இந்த ஒன்றிணைப்பு சுதந்திரமானது இல்லை என்று லெனின் கூறுகின்றார்.
இதையே தமிழ்த்தேசியவாதிகள் கூறினால் அவர்களை பிரிவினைவாதிகள் என்று (போலி)கம்யுனிஸ்டுகள் கூறுகின்றனர்.
சீமான் வைக்கும் தமிழ்த்தேசியம் இனவாத தேசியம் என்றும் அதனால் ஆதரிக்க முடியாது என்று (போலி) கம்யுனிஸ்டுகள் கூறுகின்றனர்.
அப்படியென்றால் தோழர் தமிழரசன் மார்க்சிய அடிப்படையில் பாட்டாளிகள் தலைமையில் தமிழ்த்தேசிய விடுதலையை முன்வைத்தபோது அவரையும் இனவாதி என்றுதானே முத்திரை குத்தினார்கள்.
No comments:
Post a Comment