செந்தில் பாலாஜி ஊழல் செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கோரியவர்கள் இவர்கள்.
இப்போது செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதும் அதனை கண்டிக்கிறார்கள்.
ஏன் கண்டிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு கைது செய்தவிதம் மனிதவுரிமை மீறல் என்கிறார்கள்.
சரி. உச்சநீதிமன்றம் விடுதலை செய்தும் ஈழத் தமிழர் என்பதால் நான்கு பேர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் சொந்த செலவில் நாடு திரும்ப விரும்பினால் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவு உள்ளது.
சாந்தன் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தும் அந்த நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக மாநில அரசு அவரை அடைத்து வைத்திருக்கிறது.
இது மனிதவுரிமை மீறலாக இவர்களுக்கு தெரியவில்லையா?
ஏன் இவர்கள் மாநில அரசை இதற்காக கண்டிக்கவில்லை?
No comments:
Post a Comment