Tuesday, June 27, 2023
சிங்கப்பூர் சென்ற ஈழத் தமிழர்
சிங்கப்பூர் சென்ற ஈழத் தமிழர் அங்கு குடியுரிமை பெற்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிகிறது.
கனடா சென்ற இரண்டு ஈழத் தமிழர் அங்கு குடியுரிமை பெற்று எம்.பி யாக முடிந்திருக்கிறது.
நோர்வே சென்ற ஈழத் தமிழர் ஒருவர் அங்கு குடியுரிமை பெற்று நகரபிதா (மேயர்) ஆக முடிந்திருக்கிறது.
பிரிட்டன் சென்ற ஈழத் தமிழர் குடியுரிமை பெற்று கவுன்சிலராக வர முடிந்துள்ளது.
சுவிஸ் , அவுஸ்ரேலியா சென்ற ஈழத்தமிழர்கள்கூட குடியுரிமை பெற்று தேர்தலில் போட்டியிட முடிகிறது.
ஆனால் தொப்புள்கொடி உறவுகள் என்று தமிழ்நாடு சென்ற ஈழத் தமிழர் 40 வருடமாக குடியுரிமை இன்றி அகதியாகவே வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பாகிஸ்தான் , பங்களாதேஸ் நாடுகளில் இருந்து அகதியாக வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால் ஈழத் தமிழ் அகதிகள் இந்துக்களாக இருந்தும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்காவிடினும் பரவாயில்லை சிறப்புமுகாமில் அடைத்து வைக்கும் கொடுமையை என்னவென்பது?
இது என்ன நியாயம் என்று கேட்டால் உடனே ஓடிவந்து ராஜீவ் காந்தியைக் கொன்றதால்தான் இப்படி நடத்தப்படுவதாக கூறுகின்றனர்.
ராஜீவ் காந்தி கொல்லப்படுவதற்கு முன்னரே கலைஞர் 1990ல் சிறப்புமுகாமை ஆரம்பித்து அகதிகளை அடைத்துவிட்டார் என்பதை இவர்களுக்கு எப்படி புரியவைப்பது?
No comments:
Post a Comment