1993ல் தன் கட்சிக்காரர் பசுபதி பாண்டியனை விடுதலை செய்யக்கோரி டாக்டர் ராமதாஸ் அவர்கள் சாலை மறியல் போராட்டம் செய்தார்.
அதனால் அப்போதைய முதல்வர் ஜெயா அம்மையார் ராமதாஸ் அவர்களை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தார்.
அப்போது அச் சிறையில் இருந்த எனக்கு ராமதாஸ் அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது.
அந்நேரம் திமுக கட்சியில் இருந்து வைகோ விலகியிருந்தார். அவர் சிறைக்கு வந்து ராமதாஸ் அவர்களிடம் நேரிடையாக ஆதரவு கேட்டார்
வைகோ விற்கு ஆதரவு கொடுக்கலாமே என்று நான் கேட்டதற்கு ராமதாஸ் அவர்கள் “எதற்கு இனனொரு கலைஞர்?”என்று கேட்டார்.
அப்போது அவர் அப்படி கேட்டது எனக்கு புரியவில்லை. ஆனால் இப்போது நன்றாக புரிகிறது.
எனது ஆச்சரியம் என்னவெனில் இதை ராமதாஸ் அவர்கள் எப்படி அன்றே கணித்தார்?
No comments:
Post a Comment