கனடாவில் 3 லட்சம் தமிழர் மட்டுமே உள்ளனர். ஆனால் கனடா அரசு கறுப்பு ஜூலையின் 40வது ஆண்டை நினைவுகூர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் “இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்பட வேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோருகின்றோம் மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது” என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எட்டுக்கோடி தமிழர் உள்ளனர். ஆனால் இந்திய (ஆரிய) பிரதமர் இது பற்றி எதுவுமே கூறவில்லை.
மாறாக தமிழின படுகொலைகள் செய்யும் சிங்கள அரசுக்கு தொடர்ந்து உதவி வருகிறார்.
தமிழ்நாட்டின் (திராவிட) முதல்வரும் இது பற்றி எதுவுமே கூறவில்லை.
குறிப்பு - ஆரியமும் திராவிடமும் ஒருபோதும் தமிழருக்கு உதவாது என்பதை ஈழத் தமிழர் உணர வேண்டிய தருணம் இது.
No comments:
Post a Comment