ஒரு நாள் சமையலுக்கு வாங்கும் வெண்டிக்காயைக்கூட உடைத்து பார்த்து வாங்குகிறோம்.
ஆனால் 5 வருடம் எம்மை ஆளும் அரசியல்வாதிகளை ஆராயாமல் தெரிவு செய்கிறோம்.
ஒரு துண்டு தேங்காயைத் திருடியதற்காக எலிக்கு விஷம் வைத்து கொல்கிறோம்.
ஆனால் பல்லாயிரம் கோடி ரூபாய்களை திருடும் அரசியல்வாதிகளை கொல்ல நினைப்பதில்லை.
மாறாக "உலக தமிழினத் தலைவர்" என்று பட்டம் கொடுத்து கொண்டாடுகிறோம்.
அவர்களும் அமுலாக்கத்துறை கைது செய்யும்போது இதயத்தில் ஓட்டை என்று கூறி காவேரி மருத்துவமனையில் போய் படுத்துவிடுகின்றனர்.
இப்போது இன்னொரு அமைச்சர் வீட்டில் ரெய்டு நடக்கிறதாக செய்தி வருகிறது.
அவருக்கு இதயத்தில் ஓட்டை இருக்கிறதா இல்லையா என்பது இனி தெரிய வரும்.
No comments:
Post a Comment