Saturday, July 15, 2023
தன்னை நம்பிய மலையக தமிழ் மக்களுக்கு
தன்னை நம்பிய மலையக தமிழ் மக்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வாங்கிக்கொடுக்க வக்கில்லை.
வடக்கு கிழக்கில் தமிழர் நிலங்களில் கட்டப்படும் புத்த விகாரைகளை தடுக்க தைரியம் இல்லை
இந்து ஆலயங்களை இடித்துவிட்டு புத்தர் சிலைகள் நிறுவதைக்கூட இந்தியா மூலம் நிறுத்த முயலவில்லை.
இந்த லட்சணத்தில் இந்தியா சென்று ஆந்திர முதல்வரிடம் பெருமாள் கோவில் கேட்கிறாராம் இந்த கிழக்கு ஆளுனர்.
அதுமட்டுமல்ல கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாடப் போகிறாராம்.
என்ன நோக்கத்திற்காக ஜனாதிபதி ரணில் இவரை ஆளுநராக நியமித்தாரோ அந்த நோக்கத்தை நன்றாக நிறைவேற்றுகிறார்.
காடுகளில் உள்ள மரங்கள் அழிந்துகொண்டே வந்தன. ஆனால் மரங்களோ தம்மை வெட்டும் கோடரிகளை தொடர்ந்தும் நம்பின.
ஏனெனில் மரத்தினால் செய்யப்பட்ட தன் கைப்பிடியைக் காட்டி நானும் உங்களில் ஒருவன்தான் என கோடரி கூறியதை மரங்கள் முழுமையாக நம்பின.
ஆளுனர் செந்தில் தொண்டமானும் தங்களில் ஒருவன் (தமிழன்)என மலையக தமிழர் மட்டுமல்ல வடக்கு கிழக்கு தமிழரும் நம்புகின்றனர்.
No comments:
Post a Comment