Saturday, July 15, 2023
நாய்களுடன் கடிபடுவதைவிட வழி விடுவது மேல்
•நாய்களுடன் கடிபடுவதைவிட வழி விடுவது மேல்
சின்னஞ்சிறு இலங்கை தீவில் நான்கு இந்திய தூதராலயங்கள் இருக்கின்றன.
இலங்கையில் என்ன நடக்கின்றது என்பது இலங்கையர்களைவிட இந்திய அரசுக்கு நன்கு தெரியும்.
ஆனால் நம்மவர் சிலர் இலங்கையில் சீனா வந்துவிட்டது என்று இந்தியா சென்று கூறுகின்றனர்.
சீனா வந்துவிட்டது என்று கூறினால் இந்தியா தமிழீழம் பெற்று தரும் என இவர்கள் நம்புகின்றனர்.
மணிப்பூர் பற்றி எரிகிறது. தன் சொந்த மக்கள் எரிவதையே கண்டுகொள்ளாத இந்திய அரசு ஈழத் தமிழ் மக்கள் மீது இரக்கம் கொண்டு தமிழீழம் பெற்று தரும் என எப்படி இவர்கள் நம்புகின்றனர்?
இலங்கை வந்துள்ள அனைத்து சீன முதலீடுகளும் இந்திய அரசின் அனுமதி பெற்றே இலங்கை அரசு அனுமதித்துள்ளது என்பதை இவர்கள் அறியவில்லையா?
அதுமட்டுமல்ல, இலங்கையில் உள்ள சீன முதலீடுகளைவிட அதிக சீன முதலீடுகள் இந்தியாவில் உள்ளது என்பதையாவது இவர்கள் அறியவில்லையா?
இந்தியாவும் சீனாவும் சேர்ந்து உலகில் மிகப்பெரிய வங்கியை அமைக்க திட்டமிட்டு வருகின்றன.
ஆனால் இவர்கள் இலங்கையில் சீன முதலீடுகளுக்காக இந்திய அரசு சீனாவை எதிர்த்து தமிழீழம் பெற்று தரும் என்கிறரார்கள்.
இன்னொருபுறம் இந்துத் தமிழம் கேட்டால் இந்திய இந்து அரசு உதவும் என இவர்கள் நம்புகிறார்கள்.
இந்துகோயில்களை இடித்து புத்தவிகாரைகளை சிங்கள அரசு கட்டி வருகின்றது.
ஆனால் இந்திய அரசு இதனை கண்டிக்கவில்லை. மாறாக தொடர்ந்தும் சிங்கள அரசுக்கு உதவி வருகின்றது.
உண்மை நிலை இப்படி இருக்கையில் இந்திய அரசு உதவும் என்று எப்படி இவர்கள் நம்புகிறார்கள் என்று கேட்டால்
(1) இந்தியா இன்றி தீர்வு பெற முடியுமா?
(2) உங்களிடம் என்ன தீர்வு இருக்கின்றது?
என்ற கேள்விகளைக் கேட்டு தமது இந்திய விசுவாசத்தை நியாயப்படுத்துகின்றனர்.
இப்படிக்கூறி 1983ல் சென்ற ஈபிஆர்எல்எவ் தலைவர் பத்மநாபா “ நாங்கள் இந்தியாவை பயன்படுத்த நினைத்தோம். ஆனால் இந்தியா எங்களை பயன்படுத்திவிட்டது” என்று கூறிய வார்த்தைகளை இவர்கள் மறந்துவிட்டார்களா?
இந்தியாவை நம்பிச் செல்லும் பாதையில் சென்றால் தீர்வை அடைய முடியாது என்பதை அப் பாதையில் சென்ற பத்மநாபா கூறிய பின்பும் அப் பாதையில் செல்ல இவர்கள் துடிப்பது ஏன்?
No comments:
Post a Comment