Saturday, July 15, 2023
நிருபர் - சேர்! கொக்குதொடுவாய் அகழ்வில்
நிருபர் - சேர்! கொக்குதொடுவாய் அகழ்வில் 15 மனித எச்சங்கள் கிடைத்துள்ளன. இவற்றை இனப்படுகொலைக்கான ஆதாரங்களாக ஏற்றுக் கொள்வீர்களா?
சுமந்திரன் - முறைப்படி அகழ்வு நடைபெறவில்லை. மேலும் இது ராணி குவேனி மற்றும் தோழிகளது எச்சங்களாக இருக்கும் என நான் கருதுகிறேன்
நிருபர் - என்னது குவேனியினதா? ஆனால் பெண் புலிகளின் சீருடை போன்று காணப்படுகிறதே?
சுமந்திரன் - ஆமாம். மன்னார் புதைகுழியில் கூட பிளாஸ்டிக் பைகள் காணப்பட்டன. ஆனாலும் அங்கு காணப்பட்ட எலும்புகள் சங்கிலியன் காலத்தவை என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் அறிக்கை தந்ததே. சங்கிலியன் காலத்தில் பொலித்தீன் பைகள் இல்லையே என்று அப்போது யாரும் கேட்கவில்லையே.
நிருபர் - அப்படியென்றால் கொக்குதொடுவாய் எச்சங்களையும் அந்த அமெரிக்க நிறுவனம் ஆய்வு செய்யவேண்டும் எனக் கேட்கப் போகிறீர்களா?
சுமந்திரன் - ஆம். அமெரிக்க நிறுவனம் இது குவேனி காலத்து உடல் எச்சங்கள் என அறிக்கை தரும். அதன்பின்பு நம்மவர்கள் மன்னார் புதை குழியை மறந்ததுபோல் கொக்குதொடுவாய் புதைகுழியையும் மறந்துவிடுவார்கள்.
நிருபர் - அப்படியென்றால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழருக்கான நீதி?
சுமந்திரன் - குவேனி காலத்தில் இருந்து போர்க்குற்றம் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஜநாவில் கோரப் போகிறேன்.
நிருபர் - ?????
(யாவும் கற்பனை)
😂😂
No comments:
Post a Comment