அடிமை என்ற சொல் கேவலம் இல்லை. மாறாக அடிமையாகவே வீழ்ந்து கிடப்பதே கேவலமானது.
அதுபோலவே அகதி என்ற சொல் தவறானது அல்ல. மாறாக எம்மை அகதியாகவே தொடர்ந்து வைத்திருக்கும் அரசுகளே தவறானவை.
“அகதி” என்ற சொல்லுக்கு மாறாக “ஏதிலி” என்ற சொல்லை பயன்படுத்துவதால் அகதி நிலையில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.
அகதிகள் முகாமுக்கு “ஏதிலிகள் மறுவாழ்வு முகாம்” என பெயர் மாற்றி தமிழக அரசு ஏமாற்றுகிறது.
இதை நம்பி சிலர் “அகதி” என்ற சொல்லை பயன்படுத்தாதீர்கள் என்று என்னிடம் கோருகின்றனர்.
நான் அகதி. என்னை அகதி என்று அடையாளப்படுத்துவது ஏன் தவறானது என்பதை யாராவது விளக்குவீர்களா?
No comments:
Post a Comment