நேற்று 3 பேர் வந்தனர்
இன்று 30 பேர் வந்துள்ளனர்.
நாளை இது 300 அல்லது 3000 ஆகலாம்.
முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது இது. ஆனால் அரசு பாதுகாப்பு கொடுத்து வளர்த்து விடுகிறது.
சிங்கள மக்களால் தூக்கியெறியப்பட்டவர்கள் இனவாதத்தின் பேரால் மீண்டும் அதிகாரத்திற்கு வர துடிக்கின்றனர்.
கஜேந்திரகுமாருக்கு எதிராக என்றால் பாராளுமன்றத்தில் கண்டித்திருக்கலாம்.
அல்லது எதாவது ஒரு பொது இடத்தில் கூடி கண்டித்திருக்கலாம்.
ஆனால் கஜேந்திரகுமாரின் தாயார் வீட்டின் முன் கூடுவதன் அர்த்தம் என்ன?
இது கஜேந்திரகுமாரை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினத்தையும் அச்சுறுத்தும் செயல்.
இது குறித்து தமிழ்த் தலைமைகளோ ஒன்று சேர்ந்து கண்டிக்காமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது வியப்பாக இருக்கிறது.
No comments:
Post a Comment