Wednesday, August 30, 2023
அமெரிக்காவை நம்பியோர் கைவிடப்பட்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவை நம்பியோர் கைவிடப்பட்டிருக்கிறார்கள்.
ஏன் கடவுளை நம்பியோர்கூட கைவிடப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் மக்களை நம்பியோர் ஒருபோதும் கைவிடப்பட்டதில்லை.
மக்கள் சக்தியே மகத்தான சக்தி. அது அணுகுண்டைவிட வலிமையானது.
இவர்கள் அந்த மக்கள் சக்தியை நம்புகின்றனர். அதனால்தான் சயிக்கிளில் ஜநா செல்கின்றனர்.
ஜநா வை மட்டும் நம்பியிருந்தால் மற்றவர்கள் போல் விமானத்திலோ அல்லது ரயிலிலோ சென்றிருப்பார்கள்.
ஆனால் இவர்கள் வழக்கம்போல் 31.08.2023 யன்று லண்டன் பிரதமர் இல்லத்தில் இருந்து ஆரம்பித்து மக்கள் ஊடாக சென்று 18.09.2023யன்று ஜெனிவா ஐ.நா மன்றத்தை அடைகிறார்கள்.
கொராணாவாக இருந்தாலும் சரி கொட்டும் பனியாக இருந்தாலும் சரி 20 நாட்கள் வழியில் உள்ள நாடுகளில் உள்ள மக்களை , அமைப்புகளை முக்கிய பிரமுகர்களை சந்தித்து இனப்படுகொலைக்கு நீதி கோருகிறார்கள்.
வருடா வருடம் தொடர்ந்து இப்படி நம்பிக்கையுடன் மக்களை சந்திக்கிறார்கள்.
வழியெங்கும் மக்கள் வழங்கும் ஆதரவு இவர்களை விரக்தி அடையாமல் தொடர்ந்தும் பயணிக்க வைக்கிறது.
இத்தனை வருடம் செல்கிறார்களே பெற்ற வெற்றி என்ன என்று சிலர் நக்கலாக கேட்கின்றனர்.
நீரில் மூழ்கிய ஒருவன் மேலே வரும்வரை அவன் மேலே வருவதற்கு முயற்சி செய்வது வெளியே நிறபவர்களுக்கு தெரிவதில்லை.
வெளியே வந்தபின்தான் அவன் இதுவரை மேலே வர முயற்சி செய்துள்ளான் என்பது தெரிய வரும்.
அதுபோல் இவர்கள் வெற்றிபெறும்வரை இவர்கள் செய்யும் முயற்சிகள் வெளியே நிற்பவர்களுக்கு புரியாமல் இருக்கலாம்.
ஆனால் இவர்கள் வெற்றி பெறப்போவது உறுதி. ஏனெனில் மக்களை நம்பியவர்கள் ஒருபோதும் தோல்வி அடைவதில்லை.
புலத்தில் அண்ணாமலையை அழைத்து பாலம் கட்டுவோரே போராட்டத்தை முன்நகர்த்துவதாக சிலர் நினைக்கின்றனர்.
ஆனால் உண்மையில் போராட்டம் இத்தகையவர்களால்தான் முன்நகர்த்தப்படுகின்றது என்றால் அது மிகை அல்ல.
No comments:
Post a Comment