காணமல் போதல் கொடுமை என்றால்
அதைவிடக் கொடுமையானது அவர்களை தேடி அலைவது.
அந்த கொடுமையை 14 ஆண்டுகளாக எமது உறவுகள் அனுபவித்து வருகின்றனர்.
இந்த கொடுமையை அவர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அனுபவிக்கப் போகின்றார்கள்?
இந்த தேடுதலில் தங்கள் உறவுகள் குறித்து ஒரு ஓற்றைச் சொல்லைக்கூட அறியாமல் மாண்டுபோகிறார்களே அவர்களின் வலியை எப்படி உரைப்பது?
இவர்கள் குறித்து அக்கறை அற்று இருக்கும் இந்த அரசை நொந்து கொள்வதா? அல்லது
இந்த அரசை தட்டிக் கேட்காமல் இருக்கும் எமது தலைவர்களை நொந்துகொள்வதா?
ஆனாலும் அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.
அவர்கள் தேடும் முயற்சியை கைவிடவில்லை. தங்கள் முயற்சிக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையையும் கைவிடவில்லை.
குறிப்பு - 30.08.2023 சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்.
No comments:
Post a Comment