இதுவரை முழு இலங்கையும் சிங்களவர்களுக்குரியது என்று கூறி வந்தவர் முதன் முறையாக சிஙகள பகுதிக்குள் திலீபனை எப்படி கொண்டு வர முடியும் என்று கேட்கிறார்.
இவ்வாறு கேட்பதன் மூலம் இலங்கையில் தமிழர் பகுதி என்று ஒன்று இருப்பதை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தம்.
திலீபனை தூக்கிப் பிடிப்பதன் மூலம் தமிழர் நிலம் ஏற்றுக்கொள்ளப்படுமாயின் என்ன விலை கொடுத்தேனும் தூக்கிப் பிடிப்போம்.
திலீபன் பயங்கரவாதி. அவரை எப்படி நினைவு கூர முடியும் எனக் கேட்கிறார்.
அப்படியென்றால் பயங்கரவாதி என்று கொல்லப்பட்ட ரோகண விஜயவீரா நினைவுகூர எப்படி அனுமதி அளிக்கப்படுகிறது?
சிஙகளவர் என்றால் நினைவு கூரலாம். தமிழர் என்றால் நினைவு கூர முடியாது. அப்படித்தானே?
No comments:
Post a Comment