• ஜனனி
கடந்த வருடம் வரை யாழ்ப்பாணத்தில் எந்தவித பிரபல்யமும் அற்ற ஒரு சாதாரண பெண்ணாக இருந்தார்.
கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்வில் கலந்துகொள்ள கிடைத்த வாய்ப்பு அவரை உலகெங்கும் பிரபல்யப்படுத்தியது.
குறிப்பாக பிக்பாஸில் அவர் பேசிய ஈழத் தமிழ் அவரை தமிழக மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக அவரை நினைக்க வைத்தது.
மக்கள் ஆதரவைப் பெற்றிருந்த அவரை திடீரென்று பிக்பாஸ் நிகழ்வில் இருந்து வெளியேற்றப்பட்டது பலரையும் ஆதங்கப்பட வைத்தது.
ஆனாலும் பிக்பாஸில் வென்றவர்களுக்கே கிடைக்காத பட வாய்ப்பு அவருக்கு கிடைத்து.
லியோ படத்தில் லோகேஸ் இயக்கத்தில் நடிகர் விஜய்யுடன் நடிப்பேன் என அவர் கனவில் நினைத்திருக்கமாட்டார்.
கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தியுள்ளார். பாராட்டுகள். மேலும் வளர அவருக்கு வாழ்த்துகள்.
No comments:
Post a Comment