•இன்று சர்வதேச சிறுவர்கள் தினம்
சரணடைய சொன்னார்கள், சரணடைந்தேன்.
பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள், உட்கார்ந்தேன்.
சாப்பிட பிஸ்கட் தந்தார்கள் சாப்பிட்டேன்.
அப்புறம் பார்த்தா சுட்டுக் கொன்றார்கள். இறந்துவிட்டேன்.
பரவாயில்லை. ஆனால் ஒரு கேள்வி என்னை ஏன் சுட்டுக் கொன்றார்கள் ?
ஏனென்றால் என் அப்பா பயங்கரவாதியாம். எனவே நானும் பயங்கரவாதி என்கிறார்கள்
சரி. அப்படியென்றால் , ஜேவிபி விஜேயவீராவை பயங்கரவாதி என்று கொன்றீர்கள் ஆனால் அவர் பிள்ளைகளை பயங்கரவாதி என்று ஏன் கொல்லவில்லை?
ஏனென்றால் அவர் சிங்களவர்.
இப்போது புரிகிறதா ? நடந்தது இனப்படுகொலை என்று!
குறிப்பு - இவ்வாறு இனப்படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்குரிய நீதியை எப்போது பெற்றுக் கொடுக்கப் போகிறோம்?
No comments:
Post a Comment