19.11.2023யன்று பொலிசாரின் சித்திரவதை காரணமாக சித்தங்கேணி இளைஞர் அலெக்ஸ் உயிரிழந்தார்.
இது தொடர்பாக இரண்டு பொலிசாரை கைது செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
20.10.2016 யன்று பொலிசாரின் துப்பாக்கிசூடு காரணமாக மாணவர்கள் கஜன் மற்றும் சுலக்சன் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக இரண்டு பொலிசார் கைது செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இதுவரை இம் இரு மாணவர்களுக்குரிய நீதி வழங்கப்படவில்லை. அவர்களை கொன்ற பொலிசார் தண்டிக்கப்படவும் இல்லை.
எனவே சித்தங்கேணியில் கொல்லப்பட்ட இளைஞருக்கு நீதி கிடைக்கும் என்றோ அல்லது அவரைக் கொன்ற பொலிசார் தண்டிக்கப்படுவார்கள் என்றோ எப்படி நம்புவது?
இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பவர்கள் தமிழருக்குரிய சட்ட நீதி கிடைக்காமைக்கு என்ன கூறப்போகிறார்கள்?
No comments:
Post a Comment