2009ல் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது கலைஞர் டிவியில் “மானாட மயிலாட” போட்டு மகிழ்ந்தவர்கள் இன்று அதே முள்ளிவாய்க்காலில் வந்து படம் பிடித்து போட வேண்டிய நிலை.
காலம் எவ்வளவு அற்புதமானது. அது இந்தளவு விரைவாக எம் கண் முன்னே மாறும் என்று யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
ஆனால் இதற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள்தான் காரணம் என்றால் அது மிகையல்ல.
இதை இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணனே “ புலம் பெயர்ந்த தமிழர்களே நமக்கு சோறு போடும் கடவுள்கள்” என்று தெளிவாக கூறிவிட்டார்.
சந்தை என்று ஒன்று இருந்தால் அதில் விற்பனை செய்ய வியாபாரிகள் வரத்தான் செய்வார்கள்.
எனவே தம் சந்தைக்கு வரும் (கலை) வியாபாரிகளை தெரிவு செய்யும் பொறுப்பு புலம்பெயர் தமிழருக்கு உண்டு.
அதை அவர்கள் சரியாகவே செய்வார்கள் என நான் நம்புகிறேன்.
No comments:
Post a Comment